Mr. Chandra Mohan & Manorama Vijaya Family

இறை அருளால் ஸ்ரீராமிற்கு கிடைத்த பெரியம்மா, பெரியப்பா அவர்கள் ஸ்ரீராம் பிறந்த நாள் முதல் அவனை சுமந்து வளர்த்து இன்று வரை தாங்கி நிற்பவர்கள்

Mr. Raja Cholan & Latha Family

ஸ்ரீராம் வளரச்சியில் மிகவும் மகிழ்ச்சி அடைபவர்கள். சாய்ஸ்ரீராம் டிரஸ்ட் நடத்துவதற்கு பெருமளவில் உதவி புரிபவர்கள்.

Father Joseph Xavier (Ex.Principal loyolo college-chennai)

ஸ்ரீராம் குடும்பத்தின் முக்கிய ஆலோசகர், நலம் விரும்புவர் மற்றும் மிக பெரிய சப்போர்ட்டர்ஸ்.

Dr. Sekar (Nimhans Hospital Bangalore)

குடும்பத்தின் முக்கிய ஆலோசகர் ,குடும்பத்தின் வழிகாட்டி மற்றும் மிக பெரிய சப்போர்ட்டர்ஸ் ஆவார் .

Mr. Sakayam IAS (Indian civil servant)

நேர்மையின் உருவமான திரு சகாயம் சார் அவர்கள் ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ் விழாவிற்கு வந்து வாழ்த்தி பெருமை படுத்தினார்கள். இது மிக பெரிய பெருமையான விஷயம்.

Mr.Sylendra Babu (Indian police officer)

திரு சைலேந்திரபாபு சார் அவர்கள் சந்தித்தபோது ஸ்ரீராமை பாராட்டி, ஊக்கப்படுத்தி பெருமை படுத்தினார்கள். கடல் நீச்சலின் முன் மாதிரி திரு சைலேந்திரபாபு அவர்கள் ஆவார்

Dr. Henry (P.M.R Dept CMC vellore)

ஸ்ரீராம் 8வது வயதில் அறிமுகமானவர். CMC இல் அவர் அளித்த மருத்துவ சிகிச்சையால் ஸ்ரீராம் shoe போட்டு stick வைத்து நடக்க கற்று கொண்டான். இன்றுவரை இந்த அளவு நடப்பதற்கு தன்னம்பிக்கையை அளித்தவர். ஸ்ரீராம் wheel chair இல் உட்காராமல் நடப்பதற்கு காரணமானவர்

Mr.Peter (Group Commander, Coimbatore)

தெய்வத்தின் தூதராக வந்து ஸ்ரீராமிற்கு வாழ்வின் வெளிச்சத்தை காட்டியவர். முழு குடும்பத்திற்கும் மிகப்பெரிய சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் அளித்தவர். ஸ்ரீராம் National Award வாங்குவதற்கு வாய்ப்பு தந்த இருவர் திரு பீட்டர் அவர்களும், திரு விஜயேஸ் அவர்களும் ஆவார்.

Mr. Vijeyesh Navy

திரு. பீட்டர் அவர்களின் உயர் அதிகாரியான இவர் முழு நம்பிக்கையுடன் அனுமதி அளித்ததின் காரணத்தாலேயே ஸ்ரீராம் 5kg sea Swimming செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு ஸ்ரீராமிற்கு National Award கிடைப்பதற்கு காரணமாக இருந்தது.

Dr. Paul Deva Sagayam

ஸ்ரீராம் 20வது வயதில் விளையாட்டு துறையில் ஒரு புதிய உலகத்தை அறிமுகப்படுத்தியவர். ஸ்பெஷல் ஒலிம்பிக்கில் ஸ்ரீராம் நேஷனல் அளவில் தங்கம் வெல்வதற்கு வாய்ப்புகளை தந்தவர். பயிற்சி மட்டுமே வாழ்க்கையாக இருந்த ஸ்ரீராமிற்கும் பெற்றோருக்கும் நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் அளித்தவர்.

Mr. Arumugam

ஸ்ரீராம் 8வது வயதில் Mr. ஆறுமுகம் சிறப்பு ஆசிரியராக வந்து 14 வருடங்கள் சைக்கிள் ஓட்டுவதற்கும்,எழுத்து கூட்டி பார்ப்பதற்கும், நடப்பதற்கும் பயிற்சி அளித்து சிறந்த முறையில் ஸ்ரீராமை உருவாக்கியவர்.

Mr. VijayaKumar

பாரா ஒலிம்பிக் என்ற முக்கிய நிர்வாகத்தில் இருப்பவர்.ஸ்ரீராமை ஒவ்வொரு வெற்றியின் போதும் ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துபவர்.

Mr.Selvam

ஸ்ரீராம் கடல் நீச்சல் பயிற்சியாளர். கடல் பற்றி முழுவதுமாக அறிந்தவர். ஸ்ரீராமிற்கு கடல் நீச்சல் பயிற்சி ஆரம்பித்து கடலில் நீந்துவதற்கு காரணமானவர்.

Mr.Sathish Kumar

ஸ்ரீராமை செதுக்கிய சிற்பி. ஸ்ரீராமின் உடல், மன ரீதியான அனைத்திற்கும் பயிற்சியாளர். ஸ்ரீராம் நேஷனல் அவார்ட் வாங்கும் அளவுக்கு உருவாக்கியவர்.

To Top ↑